பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.கவில் இன்று இணைந்துள்ளார்.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனை அவர் ஆதரித்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், திமுகவுக்கு ஆதராக மேடைகளில் பேசி வந்தார். சமீப நாட்களாக விஜய்யை ஆதரித்து பேசி வந்த அவர், இன்று த.வெ.க-வில் இணைந்துள்ளார்.
செங்கோட்டையனை தொடர்ந்து மூத்த அரசியல் வாதியான நாஞ்சில் சம்பத்தும் த.வெ.கவில் இணைந்துள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















