பிஜேபி-யின் பி-டீம் தான் விஜய் என வதந்தி பரப்பப்படுவதாகவும், அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தார் என்றும், தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் கேவிக்குப்பத்தில், தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம் என்ற தலைப்பில் பிஜேபி-யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஜேபி-யிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென உதயநிதி சொல்வது, ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்டதை போல உள்ளதாக கூறினார். மேலும், விஜய் யாருடைய பி-டீம் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

















