எந்த தேர்தலிலாவது திமுக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தது உண்டா என்று, தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற தலைப்பில் சேலம் கிழக்கு மாவட்ட பிஜேபி சார்பில் ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். எஸ்ஐஆர் கணக்கெடுப்பு மூலம் முதலமைச்சர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், இனிமேல் திமுக-வினர் எந்த தொகுதியிலும் கள்ள ஓட்டுப் போடாமல், தேசிய ஜனநாயக கூட்டணியினர் கண்காணிப்பார்கள் என்று அவர் கூறினார்.
எந்த தேர்தலிலும் திமுக மக்கள் செல்வாக்குடன் ஆட்சியமைக்கவில்லை என்றும், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் ந யினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

















