மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை என்ற பெயரில் வந்தே மாதரம் தேசபக்தி பாடலின் சில பகுதிகளை நீக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வுகளை தூண்டும் பாடலாக அமைந்த வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது, வங்கப் பிரிவினை மூலம் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஆங்கிலேயர்கள் ஈடுபட்டபோது, வந்தே மாதரம் பாடல் தான் அனைவரையும் ஒன்றிணைத்தது என்று குறிப்ப¤ட்டார். பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல் தான் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவின் சுதந்திர வேட்கையை தூண்டும் பாடலாக அமைந்தது என்று மோடி குறிப்ப¤ட்டார்.
தமிழில் தாயின் மணிக்கொடி பாரீர் எனப் பாடப்பட்ட தேசபக்திப் பாடல் உள்ளிட்ட பல பாடல்கள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
