மெரினா பீச் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் – வியாபாரிகள் கவலை

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

டிட்வா புயல் தாக்கம் காரணமாக சென்னையில் நேற்றும், இன்றும் தொடர் மழை பெய்தது. இதனால் மெரினா கடற்கரையின் மணல் பரப்பு முழுவதும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

இதனால், அங்கிருந்த சிறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

Exit mobile version