வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து, விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால். நாடளுமன்ற இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் முடங்கியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், இன்றுகாலை 11 மணிக்கு தொடங்கியது. ஜார்ஜியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள, அந்நாட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை, அவைத் தலைவர் ஓம் பிர்லா வரவேற்றர்.
அப்போது, அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்ததால், அவையை முதலில் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைத்து, சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். பின்னர் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால், அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.
