விழுப்புரத்தில் 5-வது மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் சார்பில் 5-வது மாவட்ட கராத்தே போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்தப் போட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.போட்டியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இளம் மற்றும் மூத்த கராத்தே வீரர்கள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான திறமைகளை வெளிப்படுத்தும் முக்கியமான விளையாட்டு நிகழ்வாக இது கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் இரா. ஜனகராஜ் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் வழங்கி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர். D. மெர்ஷன் ராபின், K.C. அழிவாசன் — மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர், V. கலியமூர்த்தி, Rtn.Dr. P. அன்பழகன் — தலைவர், Rotary Club, Rtn. Dr. B.S. சுரேஷ்குமார் — செயலாளர், Rotary Club உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நீ வெற்றி பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் போட்டியின் மூலம் மாவட்டத்தில் மாற்றுத்திறன், ஒழுக்கம், உடல் வலிமை மற்றும் விளையாட்டு ஆர்வம் மேம்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
