சமுதாய கூட சமையல் பரிமாறும் அறை மற்றும் பேவர் பிளாக் நடைபாதை – திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் அருகே சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூட சமையல் பரிமாறும் அறை மற்றும் பேவர் பிளாக் நடைபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்,

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் சேலை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அஅப்பகுதி பெரும்பாலும் ஏழை மக்கள் வாழும் பகுதி என்பதால் அவர்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாயக்கூடம் இருந்தாலும் உணவு பரிமாறுவதற்கு இடமில்லாமல் தவித்து வந்தனர்.இன்னிலையில் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சமுதாய கூடத்திற்கு மேல் தளத்தில் சமையல் பரிமாறும் அறை மற்றும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக அப்பகுதி ஆகுவதால் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு என மொத்தம் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மக்கள் பயன்பாட்டிற்காக சமையல் பரிமாறும் அறை திறந்து வைத்து மக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன்,கூளூர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவர்தனம் உள்ளிட்ட திமுக ஒன்றிய, நிர்வாகிகள்,ஏறாளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version