தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவில் உள்ள பழனிவேல் என்பவரது வீட்டில் தீ விபத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கபட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் வடக்கு தெருவை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் பழனிவேல் இன்று அதிகாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற நிலையில் கூரை வீடு எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர் இருப்பினும் வீடு முழுவதும் பரவிய தீயினால் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது மேலும் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர் தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார் இதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார் மேலும் அரசு சார்பில் வட்டாட்சியர் சதீஷ் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Exit mobile version