அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை, அதிமுக பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்தாக பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இன்று அவரை சந்தித்து, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழுவை வெற்றிகரமான நடத்தி முடித்திருப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். ஓபிஎஸ்-ஐ இணைப்பது பற்றியோ, தொகுதிப் பங்கீடு குறித்தோ, கூட்டணி பற்றியோ தாங்கள் விவாதிக்கவில்லை என்றார்.
நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி செல்ல இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

















