சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களும், விராட் கோலி 102 ரன்களும், கே.எல்.ராகுல் 66 ரன்களும் குவித்தனர்.
359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 49 புள்ளி 2 ஓவர்களின் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் எய்டன் மார்க்ரம் 110 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றி மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி சமன் செய்தது. இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, விசாகப்பட்டினத்தில் வரும் 6ஆம் தேதி நடக்கவுள்ளது.
















