புத்தக பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49 வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் தொடங்கும் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக கூறினார்.
ஜனவரி 8 முதல் 21 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை 20 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வழக்கமாக வாசகர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனைத்து தரப்பினரும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சண்முகம் கூறினார்.
















