சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

பிஜேபியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின், முதல் முறையாக சென்னை வந்தார். அவருக்கு தமிழக பிஜேபி சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிஜேபியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, முதல் முறையாக இன்று சென்னை வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பிஜேபி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் இன்றும் நாளையும், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிதின்நபின், பின்னர் டெல்லி செல்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version