மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழக அரசின் அரசாணை 352 காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகள் மற்றும் ஐந்து வட்டாரங்கள் உள்ளன. ஐந்து வட்டாரங்களை ஏழு வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும் ஆனால் தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாணை 352 ஐ வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ஊரக வளர்ச்சித் துறையில் 16 பணியிடங்கள் பறிக்கப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் ஊரக வளர்ச்சி துறை தணிக்கை உதவி இயக்குனர் பணியிடம் பறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊராட்சிகள் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தணிக்கை பணி கூடுதலாக இருக்கும். ஏற்கனவே பணிச்சுமையில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் சுமையை இது அளிப்பதாக தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும், மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. அரசாணை 352 ஐ நிறுத்தி வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அரசாணையை நீக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version