இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கச்சா எண்ணெய் இறக்குமதியையும் தாண்டி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியா-ரஷ்யா 23வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமானநிலையம் வந்தடைந்த புடினை விமனநிலையத்திற்கே சென்று அவரை கட்டி தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. கடந்த 4 ஆண்டுகளில் புதின் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசும்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அளித்துவரும் அழுத்தத்திற்கு இடையே, இருநாட்டு வர்த்தகத்தைப் பாதுகாப்பது, சிறிய அளவிலான அணுமின் உலைகளை வாங்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி தரப்படவில்லை. இது மரபுமீறிய செயல் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.















