கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே ஆதாரமான வேலை உத்திரவாத உரிமையை பாதுகாக்க கோரி சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடியின் சதியை முறியடிப்போம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் ஒரே ஆதாரமான வேலை உத்திரவாத உரிமையை பாதுகாக்க கோரியும், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற கோரியும், மக்களை வதைத்து வரி போட்டு அதானிகளுக்கு பல லட்சம் கோடி வரையறைக்கும் மோடியை கண்டித்தும்,நாட்டையே உருவாக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நிதி ஒதுக்கிட கோரியும், வேலை உறுதித் திட்டத்திற்கு தேவையான ரூபாய் 2 1/2 லட்சம் கோடியை கட்டாயமாக ஒதுக்கீடு செய்யக் கோரியும், ஆண்டுக்கு 200 நாள் வேலை நாள் ரூபாய் 600 கூலியாக உயர்த்திடக்கோரியும், ஒன்றிய அரசின் நிதி 60% எனும் கைவிட கோரியும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
