கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும், அவருடைய ஆண் நண்பரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, பாதிக்கப்பட்ட இருவரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
