மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு குறித்த அறிவிப்பை அந்தந்த அணி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
4ஆவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில், வருமாண்டிற்கான வீராங்கனைகள் தக்கவைப்பது, மற்றும் வெளியிடுவது குறித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியினரும், தங்கள் தக்கவைக்கும் வீராங்கனைகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், அமன்ஜோத் கௌர், சிவர் ப்ரண்ட், ஹூலே மேத்யூஸ், கமலினி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வெர்மா, மாரிசென் கேப், சதர்லாண்ட், மற்றும் நிக்கி பிரசாத் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, கார்ட்னர் மற்றும் மூனே ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், எல்லீஸ் பெர்ரி, மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரையும், உபி வாரியர்ஸ் அணி, ஷ்வேதா ஷெராவத் ஆகியோரையும் தக்கவைத்துள்ளது.
உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி ஷர்மா மற்றும் ஹர்லின் தியோல் ஆகியோரை அந்தந்த அணியினர் விடுவித்தது குறிப்பிடத்தகக்து.
