தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் இன்று நடக்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள, நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே, கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகள் அடியோடு முடங்கிவிட்ட நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தவும், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தவும், இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
