நான் முதல்வன் திட்டத்தின் கீழ், இதுவரை 42 லட்சம் பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இடையே, துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், ஊக்கத்தொகை மற்றும் பணி நியமன ஆணைகளையும் துணை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற, 3 லட்சத்து 30 ஆயிரம் பேர், வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

















