சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 6 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, புறநகர் செல்லும் பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பெட்டிகள் தடம் புரண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரயில் பெட்டிக்குள் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.

Exit mobile version