எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக த.வெ.க ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று என பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் வழங்கும் முகாமினை தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தான் அரசியலுக்காக எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டித்து போராட்டம் நடத்துகிறது. ஆனால் புதிய கட்சியான த.வெ.க எதற்கு போராட்டம் நடத்துகின்றனர்,என்று கேள்வியெழுப்பினார். சொல்லப்போனால் தம்பி விஜய் கட்சிக்கு எஸ்.ஐ.ஆர் பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.
