டிட்வா புயலை எதிர்கொள்வது எப்படி? – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

டிட்வா புயலை எதிர்கொள்ளவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் களத்துக்கு செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

Exit mobile version