கடந்த ஜூலை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அவர், சிறிது கால சிறைவாசத்திற்குப் பிறகு நீதிமன்றத்தின் மூலம் ஜாமின் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், போதைப்பொருள் வாங்கியதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
அதுதொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா ஏற்கனவே ஆஜராகி உரிய விளக்கம் அளித்துள்ளார். ஆனால், நடிகர் ஸ்ரீகாந்த் காலஅவகாசம் கோரியிருந்த நிலையில், இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டதால், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
