கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை, சுட்டுக்கொன்றாலும் சந்தோஷமடைவோம் என அவர்களது சொந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன் ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பே, தங்கள் கிராமத்தை விட்டு கோவைக்கு சென்றுவிட்டதாகவும், அவர்களுக்கும் இந்த ஊருக்கும் இப்போது எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள செகுட்டு அய்யனார் கோவில் மிகவும் சக்திவாய்ந்தது என்பதால், இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் யாரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது கிடையாது. ஆனால், இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, ஊரின் பெயரை கெடுத்த இருவரையும் சுட்டுக்கொன்றாலும் சந்தோஷப்படுவோம் என, கிராம மக்கள் ஆவேசத்துன் கூறினர்.















