தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள், இன்று தொடங்கி இருக்கிறது. மொத்தம் 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கி, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 70 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இன்று முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளரின் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வார். அவர் 2 படிவங்களை கொடுப்பார்.
அதனை வாக்காளர் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த படிவத்தில், தற்போதைய புகைப்படத்தையும் ஒட்டிக் கொடுக்கலாம். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும், இந்த பணிகள் துவங்கி இருக்கிறது.

Exit mobile version