தமிழ்நாட்டில் எஸ்.ஐ-ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், ஏற்கெனவே ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க, இன்றுடன் காலக்கெடு முடிகிறது. தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.













