டி டி வி தினகரன் மற்றும் ஓ பி எஸ் உடன் சேர்ந்து பயணிக்க தொடங்கிய செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார். இதையடுத்து அதிமுகவில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. EPS-க்கு எதிராக மேலும் சில ஆதாரங்களை வெளியிடுவேன் என அவ்வப்போது மிரட்டிவருகிறார் செங்கோட்டையன், இந்நிலையில், திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் ஆகியோரது ஆதிக்கம் இருக்கிறது என்பது, நாடறிந்த உண்மை என்றார்.
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு
