ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் யார், யார் வருவார்கள் என்பதை காலமே முடிவு செய்யும் என்றார்.
பொதுக்கூட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 84 விதிமுறைகளை நிறைவேற்ற, போதிய காலம் இல்லாததால், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, 18 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
















