விஜயையும், தன்னையும் பிஜேபி பெற்றெடுக்கும்போது பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவன் தான் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் விவகாரத்தில் மதவெறி அரசியல் நடத்தப்படுவதாக கூறி மதுரையில் கடந்த 22ம் தேதி நடந்த விசிக ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டதாக கூறினார்.
இதற்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பதிலளித்த சீமான், தன்னையும், விஜயையும் பிஜேபி பெற்றெடுக்கும்போது பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான் என்று கிண்டலாக கூறினார்.
















