மூஞ்சியும் மொகரையும்…செய்தியாளரை கன்னாபின்னான்னு திட்டிய சீமான்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எஸ் ஐ ஆர் தொடர்பாக திமுக தவறான தகவலை தருவதாக கூறினார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆத்திரமடைந்த சீமான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த செய்தியாளர் மரியாதையாக பேசுங்கள் என்று எச்சரித்தவுடன் சீமானுக்கு கோபம் தலைக்கேறியது, உடனே உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு சொல்லி, இந்த பக்கம் வா என்றார். உனக்கு என்ன தெரியும் மூஞ்சியும் மொகரையும் என்று ஆவேசமாக திட்டியவண்ணம் அமர்ந்தார்.

தொடர்ந்து வெளிய வந்த செய்தியாளரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் அவரை, சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை விலக்கி விட்டனர்.

Exit mobile version