பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது மகிழ்ச்சியே என்று, அக்கட்சியை அழிக்கவே தாம் அரசியல் களம் கண்டிருப்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் இதனை தெரிவித்த அவர், திராவிட கட்சிகளின் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியால், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு தனது பலத்தை காட்ட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் அது முற்றிலும் அழிய வேண்டிய கட்சி என்றும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் .

















