சென்னையில் கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில், தொழில் அதிபர் நிர்மல் குமார் என்பவரது வீட்டில் இன்று காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர் இரும்பு வியாபாரம் செய்யும் தொழில் அதிபர் ஆவார்.
இதேபோல், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகம், சௌகார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீடு, சைதாப்பேட்டையின் ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதியில், ஷாம் தர்பார் அடுக்குமாடி குடியிருப்பிலும், சோதனை நடக்கிறது.
இதேபோல், அம்பத்தூரில் திருவேங்கடா நகரில் பிரகாஷ் என்பவரது வீட்டில், அமலளாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். மொத்தம் 10 இடங்களில் ஒரே சமயத்தில் சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை சோதனைக்கான காரணம் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

















