நாட்டில் உள்ள 10 சதவீத உயர் வகுப்பைச் சேர்ந்த மக்களே, பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்தி வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் குடும்பா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் உள்ள 10 சதவீதம் பேரில் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படையினர் உள்ளதாக உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டுப் பேசினார். நாட்டின் மக்கள் தொகையில் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் 90 சதவீதம் பேர் உள்ளனர். இருப்பினும், நாட்டில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களையோ, தலித் மக்களையோ பார்க்க முடியாது என்றார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 90 சதவீத மக்கள் மரியாதையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கு போராடி வருவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
