நிதிஷ்குமார் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதால்தான், பீகார் மக்கள் வேலைத்தேடி இந்தியா முழுவதும் சென்றிருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர்கள் உட்பட பிஜேபி மூத்த தலைவர்கள் முன்னாள் பிரதமர் நேரு பற்றியும், கடந்தகாலங்களை பற்றியும் பேசுகின்றனர். ஆனால், அவர்கள் எதிர்காலம் பற்றி பேசுகின்றனரா என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய பிஜேபி அரசு மக்களை பலவீனப்படுத்தி வருவதாகவும், தேர்தலில் தோல்வி பயத்தால் தான் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டதால் தான், கேரளா முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்களில் பீஹார் மக்கள் வேலைபார்ப்பதை பார்க்க முடிகிறது என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
