பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது, அன்புமணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, ஏற்பட்ட மோதல், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் ராமதாசின் ஆதரவாளராக இருக்கும் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, உள்ள கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
வாழப்பாடி அருகே வரும்போது, அன்புமணியின் ஆதரவாளர்கள், வழிமறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அதாவது, சட்டமன்ற உறுப்பினர் அருள் கார் மட்டுமல்லாது, அவருடன் வந்த நிர்வாகிகள் 5 பேர் கார் மீதும், தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
