அரசு நிலம் துணை முதல்வர் மகனுக்கு விற்பனை – மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய நில மோசடி

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

மேலும், இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கி இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த நிலத்தை, வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் பார்த் பவார் எழுதி வாங்கி இருப்பதாகவும், துணை முதல்வரின் மகன் என்பதால் பத்திரப்பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பத்திரப் பதிவு விதிகளின்படி, அரசு நிலங்களை தனியாருக்கு விற்க முடியாது. இந்தச் சூழலில், அரசு நிலம் துணை முதல்வரின் மகனுக்கு விற்கப்பட்டிருப்பதால், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூடுதல் தலைமை செயலர் விகாஷ் கார்கே தலைமையில் உயர்மட்ட விசாரணை கமி ட்டியையும் அமைத்துள்ளார்.

இந்த விவகார ம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் புனே துணை பதிவாளர் ரவீந்திர தாரு, தாசில்தார் சூர்யகாந்த் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Exit mobile version