நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.
இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கியிருப்பதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 19ம் தேதி வரை நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்தக் கூட்டத்தொடர் அர்த்தமுள்ளதாகவும், வளர்ச்சிக்கான ஒன்றாகவும் இருக்கும் என நம்புவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்

















