வரும் சட்டமன்ற தேர்தலுக்கான உத்திகள் குறித்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய பிஜேபி அரசின் திட்டங்களை பொது மக்களிடன் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதி பங்கீடு கொடுக்கவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் திமுக காங்கிரஸ் கூட்டணியோடு மத்திய அரசில் பங்கு வகித்தபோது எஸ் ஐ ஆர் ஐ ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் மட்டுமே 4 ஆயிரத்து 379 போலி வாக்காளர்கள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
