டெல்லி கார் குண்டுவெடிப்பு – முழு விசாரணையை ஏற்றது NIA

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் நேற்று மாலை வெடித்துச் சிதறிய காரால், அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கார் வெடிப்பில் பலி எண்ணிக்கை, 13-ஆக உயர்ந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 6 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் ஆயில் மற்றும் டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஹரியானாவை சேர்ந்த சல்மானுடைய அந்த கார், பல்வேறு கைகள் மாறி, இறுதியாக காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமதுவிடம் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த அவரை, பரிதாபாத்தில் 2 ஆயிரத்து 900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றியவுடன், போலிசார் கண்காணிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வெடித்துச் சிதறிய காரில் இருந்தது உமர் முகமது எனச் சந்தேகிக்கும் போலிசா£¢. கைப்பற்றப்பட்ட உடல் அவருடையது தானா என்பதை உறுதிசெய்ய புல்வாமாவில் உள்ள அவரது தாயிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரி எடுத்துள்ளனர். பின்னர் அவரது தந்தையையும் விசாரணைக்காக போலிசார் அழைத்துச் சென்றனர்.

மேலும், பாரிதாபாத்தில் உமருடன் பணியாற்றி வந்த மருத்துவர்கள் பலரையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்துள்ளனர். வெடித்துச் சிதறிய காரை விற்கவும், வாங்கவும் உதவிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Exit mobile version