தீவிரவாதத்தை இரும்புக் கரம்கொண்டு அடக்கவேண்டும் என்று திரைப்பட நடிகை நமீதா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் உலகளாவிய அமைதி தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகை நமீதா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு உலக அமைதிக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமிதா உலக மக்கள் அமைதியை மட்டுமே விரும்புவதாக கூறினார். டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் நமிதா தெரிவித்தார்.
