அனைத்துக்கட்சி கூட்டம் மிகப்பெரிய நாடகம் – L.முருகன் விமர்சனம்

அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை களையும் நோக்கத்தில், சிறப்பு திருத்த முகாமை தேர்தல் ஆணையம் நடத்துவதாக தெரிவித்தார். ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதாக, திமுகவே பல முறை கூறிய நிலையில், அதை நீக்குவதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் பணிகளை எதிர்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்கவே, இந்த பிரச்சினையை திமுக கிளப்புவதாகவும் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

Exit mobile version