அசாம் தலைநகர் குவஹாத்தியில், 4 ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டுள்ள, புதிய முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, ரோடுஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வட கிழக்குப் பகுதிகளில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக செய்த தவறுகளை பிஜேபி அரசு சரி செய்து வருவதாக கூறினார். வனப் பகுதிகளையும் நிலத்தையும் ஆக்கிரமித்து, அஸ்ஸாமின் பாதுகாப்புக்கும், அடையாளத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், பிரதமர் குற்றம்சாட்டினார்.
ஊடுருவல்காரர்களைத் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கி வைப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளைத் தொடங்கியது. ஆனால், எஸ்ஐஆரை எதிர்ப்பதன் மூலம், ஊடுருவல்காரர்களை பாதுகாக்க தேச விரோதிகள் முற்படுகின்றனர். இந்தியாவுக்குள் ஊடுருவல்களைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
















