இந்தியாவும் – இயற்கை வேளாண்மையும் பாதை பிறந்தது என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கடந்த மாதம் 19-ஆம் தேதி குறு சிறு நடுத்தரத்தொழில்களின் முதுகெலும்பாக விளங்கும் கோவை நகரில் இயற்கை வேளாண் மாநாடு சிறப்பாக நடத்திக் காட்டப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய விவசாய அறிவு மற்றும் நடைமுறைகளை நவீனத்துவத்துடன் இணைத்து ரசாயனங்களின் தாக்கம் இன்றி பயிர்கள் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கையுடன் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால் இந்திய விவசாயத்தில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கையை கோவை மாநாடு ஏற்படுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மட்டுமன்றி, பட்டதாரிகள், பிற தொழில்களில் இருப்பவர்கள், பெரு நிறுவனங்களில் இருந்து வெளியேறியவர்கள் உள்ளிட்ட பலரும் இயற்கை விவசாயத்தில் சாதித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
