இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவருடைய தந்தை உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாகவும் உள்ள ஸ்மிருதி மந்தனா-வுக்கும், பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நீண்ட காலம் காதலித்து வந்த அவர்களின் திருமணம், மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அவருடைய மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது மந்தனாவின் தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதால், இந்த சூழ்நிலையில் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று மந்தனா கூறியதையடுத்து, ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
