தம்பி பாத்து இருந்துக்க..மம்தானிக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்

நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானிக்கு, அதிபர் டிரம்ப் மீண்டும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

நியூயார்க் நகர மேயர் தேர்தலில், டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளரை மம்தானி படுதோல்வியடையச் செய்துள்ளார். ஏற்கனவே ஜோஹ்ரான் மம்தானி- டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், மம்தானி தனது வெற்றி உரையின்போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும், இல்லை என்றால் நிறைய இழக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version