தமிழகத்தைப் போன்று கேரளத்திலும், வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேராட்டம் நடத்துது என, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக அனைத்துக் கட்சி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. பிஜேபி தவிர பிற கட்சிகள் இதில் பங்கேற்றன.
அனைத்துக் கட்சி கூட்ட முடிவில், வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் திருத்தத்திற்கான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்வது சாத்தியமற்றது என்று, முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
