சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு மலேஷியா வழியாக சென்னை திரும்பிய வடமாநிலப் பயணிகள் 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.

அவர்கள் பெருமளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பாக்கெட்டுகள், சாக்லெட்டுகள் ஆகியவற்றுக்கிடையே ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 3 பேரிடமும் இருந்து மொத்தம் 30 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும். மூவரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version