நடிகர் கிரேஸி மோகன் நாடகத்தின் நூல் வடிவிலான புத்தகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பெற்றுக் கொண்டார்.
கிரேஸி மோகன் எழுதி நடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, ‘சிரி சிரி கிரேஸி’ நாடகத்தின் நூல் வடிவமான, ‘சிரி சிரி கிரேஸி’என்ற புத்தகத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கிரேஸி மோகன் சகோதரர் மாது பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















