உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

டிட்வா புயல் காரணமாக, அடுத்த இருதினங்களுக்கு காவிரி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version